மனு எண்:

மண் வெட்டு

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
செம்மினிபட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா எங்கள் ஊர் மண்வெட்டு வேலைக்கு போகும் அனைவரும் 12 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். மண் வெட்டில் வேலை செய்வது கிடையாது, அவர்கள் அங்கு தூங்குவதே வேலை. மற்ற கிராமங்களில் கூட வேலை பார்துவிட்டு தூங்குகின்றனர். அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் அன்று மற்று 3 மணிவரை வேலை எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும் மாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

One Response to “மண் வெட்டு”

 1. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  செம்மினிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அரசு ஆணையின் படி பிற்பகல் 4 மணிவரை வேலை நடைபெற்று வருகிறது என மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.

  ———————
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்.