மனு எண்:

பசுமை வீடு ஒதுக்கித்தர வேண்டி மனு

அனுப்புநர் :
பி.சுந்தரபாண்டியன்
தஃபெ. ஏ.பாண்டி
தெற்குத் தெரு
உச்சப்பட்டி
கப்பலூர் போஸ்ட்
திருமங்கலம் தாலுகா,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் அருந்ததி வகுப்பைச் சேர்ந்தவன். ஏற்கெனவே திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஊராட்சி அவர்களிடம் பசுமை வீடு கொடுக்க சொல்லியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யான அறிக்கை சமர்ர்ப்பித்துள் ளார்க்ள. இதை புலனாய்வு மூலம் விசாரணை செயது . என் மீது தனிக்கவனம் செலுத்தி உண்மையிலேயே குடியிருக்க வீடுஇல்லாமல் அவதுதிப்படும் எனக்கு (பசுமை வீடு) ஒரு கொடுத்து உதவுமாறு மிகத் தாழ்மையடன் கேட்டுக்க கொள்கிறேன்.
இப்படிக்கு
பி.சுந்தரபாண்டியன்.

One Response to “பசுமை வீடு ஒதுக்கித்தர வேண்டி மனு”

 1. bdotmmmdu says:

  ந.க.எண் : 2289/2011/அ3 நாள் : 05.06.12
  பார்வையில் காணும் ‌தொடுவானம் மனுவில் மனுதாரர் திரு.பி.சுந்தரபாண்டியன், உச்சப்பட்டி என்பவர் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் உள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) மீது புகார் தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக இவ்வலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) அவர்கள் நேரடி ஆய்வு செய்ததில், மனுதாரர் பெயரில் பட்டா இல்லாததாலும், காலஞ்சென்ற அவரது தந்தையின் பெயரில் உள்ள பட்டாவிற்கு அவரது ச‌கோதரரிடமிருந்து தடையில்லாச்சான்று பெற்று சமர்ப்பிக்காததாலும் இவருக்கு பசுமை வீடு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்க இயலாது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளார். (அறிக்கை
  நகல் ‌இணைக்கப்பட்டுள்ளது)
  மேலும் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பசுமைவீடுகள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மூன்று பயனாளிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பயனாளியாக தேர்வு செய்யப்படுவதற்கு எவருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும், தங்களிடம் எவரும் பணம் கோரவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். (வாக்குமூலம் நகல் இணைக்கப்பட்டுள்ளது)
  எனவே மனுதாரர் கூறியுள்ள புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்ற விபரம் மனுதாரருக்கு இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.