மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
கீழச்சின்னனம்பட்டி கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் எனது பெயர் அரிச்சந்திரன் தஃபெ. பகட்டன் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான நிலம் சர்வே எண: 47-1ஜீ 0.21.0 ஏர்ஸ் நிலம் உள்ளது அதில் கிழச்சின்னணம்பட்டி கிராமத்தை சேர்ந்த திருமதி.மாரியம்மாள் கஃபெ. துரைப்பாண்டி அவருடைய மகன்கள் வேல்முருகன் மற்றும் செந்தில் ஆகியமூவரும் சேர்ந்து என்னுடைய நிலத்தை அபகரிப்பு செய்து கொண்டு என்னை கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேற்படி செந்தில் என்பவர் வார்டு கவுன்சிலராக இருந்து கொண்டும் என்னை மிரட்டி வருகிறார் . அய்யா அவர்கள் தயவு கூர்ந்து அவர்களிடம் இருந்து என்னுடைய நிலத்தை மீட்டு தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

This post was submitted by tahvptmdu.

One Response to “நில அபகரிப்பு செய்து கொலை மிரட்டல் விடுப்பது தொடர்பாக”

  1. spmdu says:

    G3/9688(A)/12 dt. 07.06.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், மனுதாரர் மனுவில் தெரிவித்திருக்கும் புகாரானது நிலம் சம்பந்தப்பட்ட சிவில் பிரச்சனையாக இருப்பதால் சிவில நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.