- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

அாிசன மக்களுக்கு பட்டா கேட்டல்

மனு எண்: தொடுவானம்/9933/25/05/2012
துறை: மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்
கிராமம்:

அனுப்புநர் :
ஆர்.ராஜகோபால், த-பெ.ராமசாமி, 2-610, வெள்ளத்தாய் அம்மாள் காம்பவுண்ட், மந்தையம்மன் கோவல் தெரு, உச்சபரம்புமேடு, திருப்பாலை கிராமம், மதுரை-14
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

உச்சபரம்புமேடு கிராமத்தில் குடியிருந்து வரும் ஆதிதிராவிடர் பறையர் வகுப்பைச் சேர்ந்த 50 நபர்கள் குடியிருக்க வீடு இல்லாதவர்களுக்கு நாங்கள் தினக்கூலி வேலை செய்து வாடகை கொடுத்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத காரணத்தால் அய்யா எங்கள் தெருவில் நோில் வந்து விசாரணை செய்து எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லாத வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஏழை அாிசன மக்கள் மீது கருணை கொண்டு கருணை அடிப்படையில் சக்கிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பில் உள்ள காலி இடத்திற்கு பட்டா வழங்க வேண்டுமென்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சக்கிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர்-2ல் நிர்வாக அதிகாாி பொறுப்பில் உள்ள சக்கிமங்கலம் அல்லது கல்லம்பட்டி மதுரை சிகுபட்டி கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு காலி இடத்தில் குடிசை போட்டு குடியிருக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு இரா.ராஜகோபால்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "அாிசன மக்களுக்கு பட்டா கேட்டல்"

#1 Comment By tahmnmdu On June 5, 2012 @ 3:39 pm

மனுதாரர் சக்கிமங்கலம் 2பிட் கிராமத்தில் இலவச வீட்டுமனை கோரியதன் பேரில் சக்கிமங்கலம் 2பிட் கிராமம் புலஎண். 103-4ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தினை மதுரை ஆதிதிராவிடர் நலத்துறை அலகு 2-ல் தனிவட்டாட்சியர் மூலம் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்ககப்பட்டு வருகிறது.

#2 Comment By dadwomdu On June 7, 2012 @ 11:44 am

சக்கிமங்கலம் 2பிட் கிராமம் புல எண்.103-4 அரசு புறம்போக்கு நிலத்தினை ஆதி திராவிடர் நத்தமாக மாறுதல் செய்ய உரிய பிரேரணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 தினங்களில் பிரேரணை முழு வடிவில் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் மனுதாரர்களது மனு தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு பட்டா வழங்க முன்னுரிமைஎன அளிக்கப்படும் என தனி வட்டாட்சியர் (நிஎ) ஆதிந அலகு-2 தெரிவித்துக்கொள்கிறார்.

#3 Comment By dadwomdu On June 7, 2012 @ 11:59 am

சக்கிமங்கலம் 2பிட் கிராமம் புல எண்.103-4 அரசு புறம்போக்கு நிலத்தை ஆதி திராவிடர் நத்தமாக பாகுபாடு மாற்றம் செய்ய முழு வடிவிலான பிரேரணை தயார் செய்யப்படுகிறது. 15 தினங்களில் பிரேணை சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டவுடன், மனுதாரது மனு தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டடு பட்டா வழங்க முன்னுரிமை வழங்கப்படும் என் தனி வட்டாட்சியர் (நிஎ) ஆதிந அலகு-2 தெரிவிக்கிறார்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9933/%e0%ae%85%e0%ae%be%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95-2/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.