- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

மனைவி பென்சன் தொகையை எனதுபெயருக்கு மாற்றுதல்

மனு எண்: தொடுவானம்/9914/21/05/2012
துறை: அனைத்து துறைகள்,ஆணையர், மதுரை மாநகராட்சி.
கிராமம்: ,சக்கிமங்கலம்

அனுப்புநர்: எம். மாறன்
த-பெ மதுரைவீரன்
குறிஞ்சி நகர்
சக்கிமங்கலம IIபிட்,
மதுரை வடக்கு வட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம் அய்யா
நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது மனைவியின் பெயர் எம். ஆண்டாள். அவர் 11வது வார்டான மதுரை மாநகர் உட்பட்ட வார்டில் துப்புரவு பணியாளராக பணிசெய்து கடந்த 2008ல் ஓய்வு பெற்று சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 28.7.2011ம் தேதியன்று காலமாகிவிட்டார் . எனது மனை வியின் முதல் கணவரின் மகன் லாரி விபத்தில் காலமாகிவிட்டார் எனவே தற்போது நான் மட்டுமே வாரிசுதாரராக உள்ளேன் எனவே எனது மனைவியின் ஓய்வுதியப்பணப்பலன்களை எனக்கு வழங்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "மனைவி பென்சன் தொகையை எனதுபெயருக்கு மாற்றுதல்"

#1 Comment By comcorpmdu On June 7, 2012 @ 12:51 pm

ஏற்பு. இறந்தவரின் இறப்பு சான்றிதழ்,மருத்துவ சான்றிதழ்,முதல் கணவரின் மகனின் இறப்பு சான்றிதழ்,மருத்துவ சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை மனுதாரர் கொடுக்கவில்லை. மேற்கண்ட ஆவணங்களை மனுதாரர் சமர்ப்பிக்கும் பட்சத்தில் மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9914/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.