- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

பேருந்து வசதி வேண்டி

மனு எண்: தொடுவானம்/9906/21/05/2012
துறை: அனைத்து துறைகள்,மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.
கிராமம்: ,வைரவநத்தம்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
வைரவநத்தம் கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
வைரவநத்தம் ஊராட்சியின் வழியாக செல்லும் நெடுஞ்சாலை வைரவநத்தம் முதல் விட்டங்குளம் வழியாக மேலசின்னனம்பட்டி வரை சுமார் 5 கீ.மீ துரம் உள்ளது. இந்த சாலை அகலம் குறைவாக உள்ளதால் பல வருடங்களாக வைரவநத்தம் ஊராட்சியின் உட்கடை கிராமமான விட்டங்குளம் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் உள்ளது.
கோட்டப் பெறியாளர் ‌அவர்கள் கீழ்கண்ட படி 27.3.2012 அன்று தெரிவித்துள்ளார்கள் (மனுதாரரால் குறிப்பிடப்பட்டுள்ள சாலையானது வைரவநத்தம் மேலசின்னம்பட்டி சாலை கி.மீ. 0/0-3/2 என்கிற கரும்பு ச‌ாலை அபிவிருத்தி சாலையாகும். (இதர மாவட்ட சாலை) இச்சாலையில் உள்ள 3.2 கி.மீ நீளமும் தார் சாலை பகுதி 3.75மீ அகலமுள்ளதாக உள்ளது. இச்சாலையில் உள்ள போக்குவரத்து செறிவின் படி சாலையின் தார் சாலை அகலம் போதுமானதாக உள்ளது. எனவே இதனை தற்போது அகலப்படுத்த இயலாது.)
எனவே பேருந்து வசதி செய்து தருமாறு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
கி.சுந்தரராஜ்
தலைவர்
வைரவநத்தம் ஊராட்சி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "பேருந்து வசதி வேண்டி"

#1 Comment By tnstccomml On June 5, 2012 @ 2:21 pm

மேற்படி கிராமச்சாலையினை ஆய்வு செய்து பேருந்து இயக்கத்திற்கு உகந்ததாக இருக்கும்பட்சத்தில் அடுத்த பேருந்து சோ்க்கையின்போது பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9906/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.