மனு எண்:

அனுப்புநர் :
வெ.முருகன்,
த-பெ.வெள்ளைச்சாமித்தேவா்
சொக்கத்தேவன்பட்டி
வாலாந்துார் (அஞ்சல்),
உசிலம்பட்டி தாலுகா,
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன்.வாலாந்துார் கிராமத்தில் பசும்பொன் நகரில் வசிக்கும் சுப்பிரமணி செட்டியார் மனைவி முத்துலெட்சுமி ஆகிய குடும்பத்தார்கள் பொய் சாதி சான்று பெற்று அரசு பணியில் சோ்ந்துள்ளனா். இந்த தகவல்களை உசிலம்பட்டி வட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சி்யா் மனு அளித்தும் பதில் கிடைக்கவில்லை. எனவே இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
வெ.முருகன்.

One Response to “பொய் சாதிசான்று பெற்று அரசு வேலை வாங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல்”

  1. tahuspmdu says:

    திரு.வி.சுப்பிரமணி என்பவர் குடும்பத்தலைவர் என்ற முறையில் திருமதி.‌லெட்சுமி என்பவரின் கணவரின் ஜாதி‌யே (இந்து-பிரமலைக்கள்ளர்) பதிவு செய்யப்பட்டது. சுமார் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் சமையல் பணிக்கு கல்வித்தகுதியோ அல்லது ஜாதிச்சான்றுகளோ நியமனத்தின்போது கேட்கப்படுவதில்லை. எனவே, நியமனத்தின்போது சாதி சான்று ஏதும் திருமதி.லெட்சுமி என்பவர் இவ்வலுவலகத்தில் தாக்கல் செய்யவில்லை என்ற விபரம் மனுதாரருக்கு ‌தெரிவிக்கப்படுகிறது