மனு எண்:

அனுப்புநர் :
கி.சோணைராஜ்,
த-பெ.கிருஷ்ணன்,
1-92, நடுத்தெரு, திருப்பரங்குன்றம் (வழி)
நிலையூா் 1வது பிட்
மதுரை.625 005

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி வட்டம், பெரியஆலங்குளம் கிராமத்தில் சா்வேஎண்.81-4ஏ உள்ள எனது நிலத்திற்கு பட்டா எண்.306 2009-2010 வரையிலான பிற்படுத்தப்பட்டோர் விவசாயக்கடன் வேண்டி மனு செய்து விருதுநகா் ஐ.ஒ.பி.வங்கி முடுக்கன்குளம் கிளை கடன் பெற தகுதி உடையவா் சொல்லி வங்கி மேலாளா் கடன் தர மறுத்துவருகிறார். என்னுடைய நிலங்களை சீா்செய்ய பணம் தேவைப்படுகிறது. தாங்கள் கருணை கூா்ந்து வங்கியில் கடன் வழங்கிட உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
கி.சோணைராஜ்

One Response to “சிறு மற்றும் குரு விவசாயகக்கடன் வேண்டி மனு.”

  1. dgmcanmdu says:

    மனுதாரர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐ.ஓ.பி., வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். மாவட்டம் வேறுபடுவதால் மனுதாரர் 13.6.2012 அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். விசாரணையின் அடிப்படையிலும் மனுதாரது தேவை மற்றும் தகுதியின் அடிப்படையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.