மனு எண்:

அனுப்புநர் :
அ.சமையன்,
த-பெ.அய்யாவு,
க.பாப்புநாயக்கன்பட்டி அஞ்சல்,
பேரையூா் வட்டம்,
மதுரை-625708

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். கவுண்டன்பட்டி பிட்-2 (உட்கடை பாப்புநாயக்கன்பட்டி) கிராமம்,சா்வே எண்.107-1ஏ, 109-3 எனது தந்தை அய்யாவு பெயரில் பூா்வீக நிலமாக உள்ளது. ஆனால் மேற்படி நிலத்தை முத்தரசி க-பெ.சண்முகம் என்ற பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மோசடி செய்து பட்டா மாற்றம் செய்துள்ளனா். இதை கேட்டதற்கு கொலைமிரட்டல் விடுத்து மிரட்டுகின்றனா். பட்டாவை எங்கள் பெயருக்கு மாற்றி தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக உசிலம்பட்டி கோட்டாட்சியரிடம் 26.8.2011 அன்று புகார் மனு கொடுத்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இப்படிக்கு,
அ.சமையன்

One Response to “போலியாக பட்டா மாற்றி ஆக்கிரமிப்பு செய்தது தொடா்பாக”

  1. rdouspmdu says:

    கவுண்டன்பட்டி பிட்-2 (உட்கடை பாப்புநாயக்கன்பட்டி) கிராமம்,சா்வே எண்.107-1ஏ, 109-3ல் கட்டுப்பட்ட மொத்த விஸ்தீரணம் ஏக்கர் 2.78 செண்ட் இடத்தில் யுூ.டி.ஆர் தவறு உள்ளது தொடர்பான அறிக்கை ஏற்கனவே மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.