- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக‌

மனு எண்: தொடுவானம்/9873/17/05/2012
துறை: BDO அலங்காநல்லூர்,அனைத்து துறைகள்
கிராமம்: ,அழகாபுரி

அனுப்புநர்: ம.வெள்ளைத்தாய் மருதமுத்து,
உப தலைவர், அழகாபுரி ஊராட்சி,
அழகாபுரி கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
எங்கள் ஊரின் கிழக்கில் உள்ளே செல்லும் கண்மாய் ஓடையில் மரகன்றுகள்,வீட்டின் கழிப்பறை வசதி செய்தும் இருக்கின்றனர். அதனால்மழைகாலங்களிலும், விவசாய உபரி நீர் அதிகமாக வரத்து இருப்பதால் ஊருக்குள் நீர் புகும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.இந்த‌ ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
நன்றி


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "கண்மாய் ஓடை ஆக்கிரமிப்பு சம்பந்தமாக‌"

#1 Comment By bdoalamdu On May 30, 2012 @ 10:45 am

அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் உள்ள கண்மாய் ஓடையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அளவீடு செய்வதற்கு 29.05.2012 அன்று வாடிப்பட்டி சார்நிலை கருவூலத்தில் உரிய கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 20 தினங்களில் வருவாய் அலுவலர்களின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9873/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%88-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.