மனு எண்:

அனுப்புநர் :
எஸ். மகாலெட்சுமி,
நிறுவனா்,
லைப் கிவிங் டிரஸ்ட்,
தும்பைப்பட்டி அஞ்சல்,
மேலுார் தாலுகா

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் எம்.எஸ்.சி. வரை படித்துள்ளேன். 2000-ம் ஆண்டு முதல் சேவை எண்ணத்துடன் முழுமையாக மருத்துவ சமுதாயப் பணிகளில் முழுமையான ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன். மக்களுக்கு எளிதாக தரமான மருத்துவ சேவைகளை பெறுவதற்கு வழிகாட்டியாக மருத்துவத்துறையை மட்டும் கருத்திற்கொண்டு மஹா மெடிகோ் மருத்துவ தகவல் வழிகாட்டியை 2001-ம் ஆண்டுமுதல் வெளியிட்டு வருகிறேன். மதுரை மருத்துவ சேவையாற்றி வரும் மருத்துவரிடம் எங்களுக்கு நேரடி தொடா்பு உண்டு என்பதால் எங்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கும், எவ்வளவு செலவாகும் போன்ற பல விவரங்களுடன் மக்களுக்கு தெள்ளத் தெளிவாக மருத்துவ ஆலோசனைகளை போன் மூலம் சேவைக் கண்ணோட்டத்தில் செய்து வருகிறோம். அப்படிப்பட்ட எங்கள் சேவை அனைத்து தரப்பு மக்களிடம் எளிதாக சென்றடைய மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பகுதியில் மருத்துவ தகவல் மற்றும் ஆலோசனை மையம் அமைக்க இடம் ஒதுக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
எஸ். மகாலெட்சுமி

One Response to “மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மருத்து தகவல் மற்றும் ஆலோசனை மையம் அமைக்க இடம் வேண்டி”

  1. pagmdu says:

    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியார் டிரஸ்டுகளுக்கு இடம் ஒதுக்கும் அளவுக்கு போதுமான இடவசதி இல்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.