மனு எண்:

அனுப்புநர் :
ஊர் பொதுமக்கள்,
நிலையூர் பிட்1 கிராமம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

திருப்பரங்குன்றம் ஊராட்சி, நிலையூா் 1-வது பிட் கிராமத்தில் உள்ள நீா்நிலை பகுதியில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும்படி ஆக்கிரமிப்பு செய்து காளவாசல் தொழில் நடத்தி வருகின்றனா். இதனால் ஏற்படும் கொசு மற்றும் புகையினால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மேற்படி நீா்நிலை பகுதியினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கிராம பொது மக்கள்,
நிலையூா் 1-பிட் கிராமம்

One Response to “நீா்நிலை பகுதியினை ஆக்கிரமிப்பு செய்துள்ளது – அகற்றக் கோருதல்”

  1. tahmsmdu says:

    மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள கண்மாய் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, மனுதாரர் தெரிவித்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித்துறையினரைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பொதுப்பணித்துறையினருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.