மனு எண்:

அனுப்புநர் :
செல்வி.ஆர்.பிரமிளா,
த/பெ.இராஜமாணிக்கம்பிள்ளை (லேட்)
4/9 பாக்கியலெட்சுமிவேலுச்சாமி இல்லம்,
ஜவகர்நகர் 2வது தெரு, திருமங்கலம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் திருமங்கலத்தில் பிகேபி மேன்சனில் உள்ள லதா மெடிக்கலில் பீட்டர் ஞான்யா என்பவரிடம் 25 வருடங்களாக சம்பளமில்லாமல் வேலை பார்த்து வருகிறேன். எனது சம்பளத்திற்கு பதிலாக மேற்படி கடையை நானே நடத்திக்கொள்ள முதலாளி கூறியதின்பேரில் எனது சகோதரி மூலம் ரூ.150 கடனாக பெற்று அதனை கடை முதலாளியிடம் கொடுத்தேன். நாளது தேதிவரையில் அதற்கான வட்டியும் தரவில்லை. வேலைநாட்களுக்கான ஊதியமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடை முதலாளி இறந்து விட்டார். அவரின் மகளும், மருமகனும் சேர்ந்து கடையை இரவில் வந்து பூட்டிச் சென்றுவிட்டார்கள். மறு நாள் கடையை திறக்கச் செல்லும் போது என்னை அடித்து கொன்று விடுவேன் என என்னை மிரட்டுகிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பும், கடைக்காக நான் கொடுத்த பணமும், சம்பளமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஆர்.பிரமிளா
நாள்.14.05.2012.

One Response to “கடைக்கான தளவாடச்சாமான்கள் மற்றும் கடை நடத்திக்கொள்ள கொடுத்த பணத்தை திரும்ப வழங்க மறுத்தல் தொடர்பாக.”

  1. spmdu says:

    G3/9844/14/12 dt. 22.05.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், மனுதாரர் எதிர்மனுதாரரின் கடையில் வாடகைக்கு மெடிக்கல் ஸ்டோர் வைத்திருந்த பீட்டர் ஞானையா என்பவரிடம் வேலை செய்தவர் பீட்டர் ஞானையா இறந்தபின்பு அவருடைய வாரிசுதாரர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். ஆனால் மேற்படி பீட்டர் ஞானையாவிடம் வேலை செய்த மனுதாரர் கடையை தான் நடத்தவேண்டும் அல்லது எதிர்மனுதாரரிடம் பணம் வாங்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் மனுபோட்டுள்ளார். எனவே இம்மனு மீது மேல்நடவடிக்கை தேவையில்லை.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.