மனு எண்:

அனுப்புநர் :
எம். மலைராஜன்,
த/பெ.சின்னச்சாமி என்ற மச்சக்காளை, மற்றும் செங்கல் கூலி தொழிலாளர்கள், பாப்பன்பட்டி, பொட்டுறுப்பட்டிபஞ்சாயத்து
உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

உசிலம்பட்டி, தாலுகா, பாப்பன்பட்டி, பொடுறுப்பட்டியில் செங்கல் கூலி தொழிலாளர்களுக்காக (இருளாயி அம்மாள் டிரஸ்ட்) இலவச பட்டா வழங்கிட இடம் ஒதுக்கப்பட்டது. மேற்படி இடம் அளப்பதில் பிரச்சனை உள்ளதாகத் தெரிவித்து (இருளாயி அம்மாள் டிரஸ்ட்)மாற்று இடத்தில் பட்டா வழங்குவதாக உசிலம்பட்டி கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியரால் உறுதி அளிக்கப்பட்டது. நாளது தேதிவரை எந்தவிதமான பதிலும் இல்லை. எனவே எங்களுக்கு உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள இருளாயி அம்மாள் டிரஸ்டில் 25 செங்கல் கூலி தொழிலாளர் குடும்பத்துக்கும் பட்டா வழங்கி நிலத்தை அளந்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
எம். மலைராஜன்,
மற்றும் செங்கல் கூலி தொழிலாளர்கள்.
நாள்.14.05.2012.

One Response to “உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள இருளாயி அம்மாள் டிரஸ்டில் மாற்று இடத்தில் பட்டா வழங்கக்கோருதல்99”

  1. tahuspmdu says:

    இருளாயி டிரஸ்ட் ஆதிதிராவிட நலத்திறகாக இயங்கிவருகிறது எனவும் அதன்படி இது ஆதிதிராவிட தனிவட்டாட்சியர் (நி.எ) ஆதிதிராவிடர் நலம் உசிலம்பட்டி வட்டாட்சியரால் பட்டா வழங்கப்பட்டுள்ளது. வீட்டடிமனை கோரும் நபர்கள் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கான சாதிச்சான்றுகளை கொடுக்கவில்லை. எனவே மேற்கண்ட ஆவண நகல்களுடன் உசிலம்பட்டி ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தை அணுக மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.