- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

இலவச வீட்டடி மனை பட்டா வழங்க கேட்டல்

மனு எண்: தொடுவானம்/9835/14/05/2012
துறை: அனைத்து துறைகள்,மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்
கிராமம்:

அனுப்புநர் :
எம். சுப்புலட்சுமி,
4/24 சுப்பிரமணியபுரம் அரிசன காலனி,
மதுரை – 11
மதுரை மேற்கு

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவள். இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். 20 வருடங்களாக வீட்டு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். எனது கணவருக்கு சரியான வருமானம் கிடையாது. எனவே, தயவு செய்து கருணையுடன் மனமுவந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
எம். சுப்புலட்சுமி,
நாள்.14.05.2012.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "இலவச வீட்டடி மனை பட்டா வழங்க கேட்டல்"

#1 Comment By dadwomdu On May 17, 2012 @ 9:03 am

மனுதாரர் மனு இலவச வீட்டுமனைப்பட்டா ‌கோரும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர் வீட்டுமனைப்பட்டா வழங்ககோரும் மனுவினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு புகைப்படங்களுடனும், சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் இருப்பிடச் சான்றுடனுன் மனுச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார். அவ்வாறு மனு செய்த பின்னர் அவருடைய மனுவிற்குரிய பதிவு எண் வழங்கப்படும் என்றும் பின்னர் பட்டா வழங்கும்போது அவருக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9835/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%b4/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.