மனு எண்:

அனுப்புநர் :
ரா. பாண்டியம்மாள் ராமு,
தலைவர்,
சோழவந்தான் பேரூராட்சிமன்றம்,
மதுரை மாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

பெண்கள் மாணவியர் விடுதிக்கு தற்சமயம் கல்யாண மண்டபத்தை கேட்டுள்ளார்கள். பேரூராட்சி வருமானம் மேற்படி பேரூராட்சி கல்யாணமண்டபம் ஒன்றுதான். பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடுப்பகுதியில் உள்ளது. பேரூராட்சியில் கூட்டம் நடத்துவதற்கும் மேற்படி கல்யாண மண்டபம் பயன்படுகிறது.
மீன்காரத்தெருவில் உள்ள யூனியன் பள்ளிக்கட்டிடம் மாணவர்கள் படிக்காமல் பள்ளி செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. அதை தற்சமயம் சத்துணவுமாவு வைக்க விடப்பட்டு உள்ளது. அந்த இடம் பெண்கள் மாணவியர்கள் பாதுகாப்பு இடமாக உள்ளது. அந்த இடத்தை பார்வை செய்தவர்கள் நல்ல இடம் என்று கூறி சென்றார்கள். ஆதலால் மேற்படி இடத்தை பெண்கள் மாணவியர் விடுதிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
எங்களுக்கு கல்யாண மகால் வருமானத்திற்கு தேவைப்படுகிறது. பேரூராட்சியில் கூட்டம் போடுவதற்கும் இடமும் இல்லை. எனவே, மேற்படி மீன்காரத்தெருவில் உள்ள யூனியன் பள்ளிக்கட்டிடத்தை அய்யா அவர்கள் ஆய்வுசெய்து மேற்படி இடத்தை மாணவியர் விடுதிக்கு பரிந்துரைக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ரா.பாண்டியம்மாள் ராமு
நாள்.14.05.2012.

One Response to “பேரூராட்சிக்கு வருவாய் வேண்டுதல் தொடர்பாக.”

  1. adtpmdu says:

    மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடிதம் நக எண்.பிந2/43412/2011 நாள்.30.7.2011ன்படி சோழவந்தான் பேரூராட்சிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தினை அலங்காநல்லுர் அரசு பள்ளி மாணவியர் விடுதிக்காக பொதுப்பணித்துறையால் நிர்ணயிக்கப்பட்ட வாடகைக்கு வழங்குவதற்கு தெரிவிக்கப்பட்டது எனவும், பேருராட்சி மன்றத் தீர்மானம் எண்.108 நாள்.26.08.2011 ல் மாத வாடகை மின்கட்டணம் நீங்கலாக் ரூ.20000/- நிர்ணயம் செய்திட பொதுப்பணித்துறையிடம் கோரப்பட்டதில் நாளது தேதிவரையில் வாடகை நிர்ணயம் செய்யப்படவில்லை. மீன்காரத் தெருவில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை மேற்படி பிற்பட்டோர் மாணவியர் விடுதி அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை கேட்டுக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பிரேரணை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்ற விபரம் செயல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது