- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

சுகாதாரக் குறைவு, பஸ்,தெரு விளக்கு, குடிநிர் வசதி தேவை.

மனு எண்: தொடுவானம்/9807/11/05/2012
துறை: BDO - திருப்பரங்குன்றம்
கிராமம்: ,நிலையூர் பிட்1

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
நிலையூர் பிட்1 கிராமம்,
*(கைத்தறி நகர்)*
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம்,
ஊர் பொதுமக்கள்,
சார்பாக,
1. எங்கள் பகுதியில் சுகாதாரம் மிக மிக குறைவாக உள்ளது, குப்பை போட கூட வசதி கிடையாது. (குப்பை தொட்டி கிடையாது.) தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது.
2. பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லை. சரியான நேரத்திற்கு பஸ் வருவதில்லை.
3. குடிநிர் வசதி கிடையாது.
4. தெரு விளக்கு வசதி சரியாக கிடையாது.
5. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பு கொள்ள புகார் பெட்டி இருத்தல் அவசியம்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "சுகாதாரக் குறைவு, பஸ்,தெரு விளக்கு, குடிநிர் வசதி தேவை."

#1 Comment By tnstccomml On May 16, 2012 @ 12:31 pm

தற்போது கைத்தறிநகருக்கு 70 தனிநடைகள் இயக்கப்பட்டு வருகிறது என்பதையும் பயணிகளின் அடர்வு உயரும்பட்சத்தில் கூடுதல் நடைகள் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.

#2 Comment By bdotpkmdu On June 6, 2012 @ 2:29 pm

தற்போது குப்பை போட தொட்டிகள் வைத்து வசதிசெய்துக்கொள்ளப்பட்டுள்ளது. நாய் தொல்லைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தெரு விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பு கொள்ள புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9807/%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.