மனு எண்:

Email a copy of 'சடச்சிபட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி எழுத்தர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் சம்மந்தம்மாக. ' to a friend

* Required Field






Separate multiple entries with a comma. Maximum 5 entries.



Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “சடச்சிபட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி எழுத்தர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் சம்மந்தம்மாக.”

  1. bdochemdu says:

    சடச்சிப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி எழுத்தர் மீது கொடுக்கப்பட்ட புகார் மீது கீழ்கண்டவாறு பதில் சமர்பிக்கப்படுகிறது.
    1. மகாத்மா காந்தி தேசிய ஊரக ‌வேலைவாய்ப்பு திட்டத்தில் 2012-13ம் ஆண்டுக்கு பயனாளிகள் வேலை செய்த அனைவருக்கும் 1.4.2012ம் ‌தேதி முதல் பாரத வங்கி வாலாந்துார் கிளை மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆகவே இதில் முறைகேடுகள் ஏதும் இல்லை.
    2. பசுமைவீடுகள் கட்டும் திட்டத்தில் 2012-13ம் ஆண்டுக்கு சடச்சிப்பட்டிஊராட்சிக்கு ஒதுக்கீடு எதுவும் வரப்படவில்லை.
    3. 2010-11ம் ஆண்டுக்கு ஊரக உள்கட்டமைப்பு திட்டத்தில் (கி.ஊ) சடச்சிப்பட்டி கிராமத்தில் மயானம் செல்லும் பாதையில் திருமங்கலம் பிராதான கால்வாயின் குறுக்கே நடைபாலம் அமைத்தல் மதிப்பீடு ரூ.117000 கிராம ஊராட்சியின் தீர்மான அ‌டிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நிர்வாக அனுமதி பெறப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.
    4. சடச்சிப்பட்டி ஊராட்சியில் படிவம் எண். 1முதல் 31 முடிய பாரங்கள் பதிவேடுகள் மற்றும் இதரப்பதிவேடுகள் முழுமையாக பதிவு செய்யப்பட்டு ஊராட்சி தலைவரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் 1.5.2012ம் தேதி கிராம ச‌பைக் கூட்டம் முறையாக வாக்காளர்கள் முன்னிலையில் ஊராட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.