மனு எண்:

அனுப்புநர் :
கிராம பொதுமக்ககள்,
பூ.பெருமாள்பட்டி,
பூதகுடி-அஞ்சல்,
ஆணையூா் வழி,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை-17

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நாங்கள் மேற்குறிப்பிட்ட முகவரியில் குடியிருந்து வருகின்றோம். தமிழக முதல்வரின் திட்டத்தின் கீழ் எங்கள் பஞ்சாயத்தில் மரக்கன்று நடப்பட்டு இருக்கின்றது.
மேலும் பூதகுடி பிரிவு முதல் கழுங்கு வரை மரக்கன்று நடாமல் இருக்கின்றது. இப்பகுதியில் கடுமையான வெயிலுக்கு நிற்கக்கூட நிழல் இல்லாமல் இருக்கின்றது. ஆதலால் பூதகுடி பிரிவு முதல் கழுங்கு வரை வயல் ஓரங்களில் புங்க மரக்கன்று நற்று பொது மக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,
டி.சசிக்குமார்.

One Response to “பூதகுடி பிரிவு முதல் கழுங்குவரை சாலை ஓரங்களில் மரக்கன்று நடுவது-சம்பந்தமாக.”

  1. dfosocimdu says:

    மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் புதகுடி முதல் கழுங்கு வரை சாலையின் இரு ஓரங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு நிதி ஒதுக்கீடு தற்சமயம் ஏதும் இல்லை, வருங்காலங்களில் திட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறும் ‌பொழுது இப்பொருள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.