- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

புதிய குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக‌

மனு எண்: தொடுவானம்/9758/05/05/2012
துறை: அனைத்து துறைகள்,மாவட்ட வழங்கல் அலுவலர்
கிராமம்: ,பழையூர்

அனுப்புநர்: அ.பிச்சைமுருகன் த/பெ அழகர்சாமி ரெட்டியார் அப்துல்கலாம் தெரு பழையூர்.[கிராமசபை மே-1].

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் நான் பழையூர் கிராமத்தில் மேற்கண்ட முகவரியில் வசிக்கிறேன் 3.11.2009ல் அன்று தீப்பற்றி எரிந்து விட்டது.எனது மனைவி தீவிபத்தில் இறந்து விட்டார்.அதில் எனது ரேஷன் கார்டு தீ பிடித்து எரிந்துவிட்டதால் புதிய ரேஷன் கார்டுக்கு பல‌முறை மனு கொடுத்தும் கிடைக்கவில்லை.எனவே புதிய ரேஷன் கார்டு வழங்க ஆவண செய்யுமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "புதிய குடும்ப அட்டை வழங்குவது தொடர்பாக‌"

#1 Comment By dsupomdu On May 15, 2012 @ 12:48 pm

மனுதாரர் குடும்ப அட்டை 100 சதவீத தணி்க்கையின் போது இரத்து செய்யப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு நகல் குடும்ப அட்டை வழங்க இயலாது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

வட்ட வழங்கல் அலுவலர்
பேரையூர் வட்டம்


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9758/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.