மனு எண்:

பஸ் வசதி வேண்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அழகாபுரி கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகிய ஊர்களிருந்து, எங்கள் ஊர் வழியாக அலங்காநல்லூர் வரை பேருந்து சென்றது. சில நாட்களாகவே வரவில்லை.ஆனால் மற்ற பேருந்துகள் மதுரையிலிந்து வருகின்றது. எங்கள் ஊர் ரோடு போடுவதால் வரவில்லை என்று நினைத்தோம்.ஆனால் matal road போட்டு முடித்துவிட்டனர். தயவு கூர்ந்து எங்கள் ஊருக்கு வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகிய ஊர்களிருந்து, எங்கள் ஊர் வழியாக அலங்காநல்லூர் வரை, திரும்பவும் பேருந்தை இயக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறோம்.
நன்றி

One Response to “பஸ் வசதி வேண்டி”

  1. tnstccomml says:

    அடுத்த பேருந்து சேர்க்கையின்போது வாடிப்பட்டி – அலங்காநல்லுார் வழித்தடப் பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.