மனு எண்:

அனுப்புநர்: வெ. மொக்கமாயன்
பூதிப்புரம் கிராமம்,
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் பூதிப்புரம் கிராமத்தில் வசித்து வந்த திருமதி மொ. கச்சம்மாள் என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிட்டத்தின் கீழ் 06-10-2010 – தேதி வேலை பார்த்து கொண்டு இருந்த போது இறந்து விட்டார். அது குறித்து செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு ந.க.எண். 764/11/ தி6: Date 07-11-ம் தேதியிட்ட கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தின் தற்போது நிலையினை தயவு செய்து தெரிவிக்கவும்.

One Response to “காந்தி தேசிய ஊரக வேலை உறுதிட்டத்தின் கீழ் 06-10-2010 – தேதி வேலை பார்த்து கொண்டு இருந்த போது இறந்து விட்டது குறித்து.”

  1. podrdamdu says:

    மனுதாரது மேற்கண்ட கோரிக்கை தொடர்பாக குடும்ப உறுப்பினர்களின் சான்று மற்றும் அரசு வழக்கறிஞரின் சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க மனுதாரர் திரு.மொக்கமாயன் என்பவரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் மேற்கண்ட சான்றிதழ்கள் இரண்டையும் விரைவில் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார். மேற்கண்ட சான்றுகள் மனுதாரரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பின்னரே மனுதாரது ‌கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.