மனு எண்:

அனுப்புநர் :
குணசேகரன்
த-பெ.பில்லான்
லெட்சுமி அம்மாள்
த-பெ.நல்லகுரும்பன்(லேட்)
2-230, வடக்கம்பட்டி(SC))தெரு
உசிலம்பட்டி வட்டம்
மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
மேற்படி வடக்கம்பட்டி கிராமத்தில் எங்களது முன்னோர்களுக்கு சொந்தமான எங்கள் கோவிலையும், கோவில் நிலங்களையும் அல்லது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து பணத்தை வசுல் செய்து தரும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் நம்பிக்கையுள்ள,
பி.குணசேகரன்
லெட்சுமி அம்மாள்.

One Response to “நிலங்களை மீட்டுத் தரும்படியும் அல்லது அதற்கான பணத்தை வசுல் செய்து தரும்படியும் கோருதல்”

  1. tahuspmdu says:

    மனுதாரர் இப்பொருள் தொடர்பாக ஏற்கனவே பல மனுக்கள் அளித்துள்ளார். இதற்கு ஏற்கனவே மனுதாரருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. மனுதாரர் குறிப்பிடும் புலங்கள் பட்டா நிலங்களாக கணக்குகளில் தாக்கலாகி உள்ளது. மனுதாரர் குறிப்பிடும் அருள்மிகு கடசாரி நல்ல குரும்பர் கோவில் மாசி பச்‌சையின் போது இருதரப்பினர்கிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் 1987 முதல் மேற்படி வைபவத்தின் போது உண்டியல் வசூல் செய்யும் பணி வருவாய்த் துறையால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இது தொரடர்பாக சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மனுவில் தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரும் கோவில் நிலங்கள் தொடர்பாக ஆவணங்கள் ஏதும் இருப்பின் நீதிமன்றம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ள மனுதாரர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.