- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

சர்வே கல்லை பிடுங்கி எரிந்தவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – பிடி எரிந்த கல்லை மீண்டும் அதே இடத்தில் ஊன்ற வேண்டும் என்பது குறித்து.

மனு எண்: தொடுவானம்/9638/29/04/2012
துறை: காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.
கிராமம்: ,சடச்சிபட்டி

அனுப்புநர்: V.P. லீமாரோஸ்லின்
சடச்சிபட்டி, அய்யனார்குளம் (Bo)
உசிலம்பட்டி (Tk) மதுரை (Dt)
Pin: 625537
Mobile: 9842674130

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

பார்வை 1. தங்கள் அலுவலக கோப்பு எண்
. F.L. No 67 / 12 Date: 26-04-12
பார்வை 2 : சர்வே எண் 92 / 2I2 சடச்சிபட்டி கிராமம்

பார்வை 2-ல் கண்ட எனது நிலத்தை கடந்த 26-04-12-ம் தேதி அத்துமால் செய்து சர்வே கல் ஊன்றபட்டது. அன்று எனது நிலத்திற்கும் தெற்கே உள்ள நிலத்து உரிமைகாரரான திரு மூ. ராஜா என்பவர் அத்துமால் செய்யும் உடன் இருந்தார். ஆனால், நிலத்துக்கு உரிமையில்லாத அவரின் தாயார் திருமதி மூ. ஒச்சம்மாள் என்பவர் ஊன்றபட்ட சர்வே கல்லை இன்று 29-04-12-ம் தேதி காலை 10-30, மணி அளவில் பிடிங்கி எரிந்து விட்டார் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்க்கு கொண்டுவருகிறேன்.

எனவே, சர்வே கல்லினை பிடிங்கி எரிந்த மேற்படி எனது கிராமத்தை சேர்ந்த ராஜா என்வரின் தாயாரும் திரு. மூக்கை என்பவரின் மனைவியும்மான திருமதி ஒச்சம்மாள் என்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு பிடுங்கி எரியபட்ட சர்வே கல்லை மீண்டும் அதே இடத்தில் உன்றிட தாங்ககள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "சர்வே கல்லை பிடுங்கி எரிந்தவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – பிடி எரிந்த கல்லை மீண்டும் அதே இடத்தில் ஊன்ற வேண்டும் என்பது குறித்து."

#1 Comment By tahuspmdu On May 8, 2012 @ 12:02 pm

மனுதாரரின் பட்டா நிலம் ஏற்கனவே நில அளவரால் நில அளவை செய்து காண்பிக்கப்பட்டுவிட்டது. இதில் ஊன்றப்பட்ட சர்வே கல்லினை மனுவில் தெரிவிக்கப்பட்ட நபர் பிடிங்கி எரிந்திருக்கும் பட்சத்தில் காவல் துறையில் புகார் தெரிவிக்க மனுதாரர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

#2 Comment By spmdu On May 23, 2012 @ 5:10 pm

G3/9638/12 dt. 23.05.12 இம்மனு சம்ப்நதமாக விசாரணை செய்ததில் மனுதாரர் தனக்கு சொந்தமான சர்வே எண் 92 / 2I2 சடச்சிபட்டி கிராமம் உள்ள இடத்தில் சர்வேயரை வைத்து அளந்து கல் ஊன்றும்போது எதிர்மனுதாரர் இடத்தில் ஒரு கல் ஊன்றியதால் அந்தக் கல்லை எதிர்மனுதாரர்கள் பிடுங்கிஉள்ளார்கள். மனுதாரர் அத்துமால் செய்து கல் ஊன்றும் போது பக்கத்து நிலத்துக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை எனவும் தெரியவருகிறது. மேலும் உத்தப்பநாயக்கனுார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இருதரப்பினர்களிடம் பேசி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார்.

காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9638/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.