மனு எண்:

விவசாயத்தை பாதுகாப்பது சம்மந்தமாக‌

அனுப்புநர்: கிராம பொதுமக்கள்
மறவர்பட்டி இராஜாக்கள்பட்டி ஊராட்சி பலாமேடு[po] வாடிபட்டி தாலுகா மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஜயா. என்களது ஊர் அருகில் செம்பட்டி ரிசர்வு forest உள்ளது அதன் அடிவாரத்தில் சுமார் 250 ஏக்கர் விவசாயம் செய்யுதுவருகிறோம். இரவு நேரங்களில் மழையிலிருந்து வரும் காட்டு எருமை மாடு விவசாயம் செய்துள்ள பயிற்களை திண்பதுடன் அளித்து விட்டும் செல்லுகின்றன மேலும் விவசாயத்தை அளிக்கும்போது விரட்ட சென்றால் எங்களை தாக்குகின்றது எங்கது கிராமம் விவசாயத்தை மட்டும் நம்பி உள்ளது எனவே அய்யா அவர்கள் விவசாயத்தையும் எங்களது உயிரையும் பாதுகாக்க Reserve forestயை சுற்றி கம்பி வேலி அமைத்துக்கொடுக்க ஆவணம் செய்யும்படி பனிவுடன் கேட்டுக்கொள்லுகிறோம்

One Response to “விவசாயத்தை பாதுகாப்பது சம்மந்தமாக‌”

  1. dfomdu says:

    செம்பட்டி காப்புக்காடுகளை சுற்றி கம்பி வேலி அமைப்பது தொடர்பாக நிதி ஒதுக்கீடு தற்சமயம் ஏதும் இல்லை. வருங்காலங்களில் இப்பொருள் தொடர்பாக திட்ட நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றால் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.