- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

ஊராட்சி தலைவர் என்னைமிரட்டுவது சம்மந்தமாக

மனு எண்: தொடுவானம்/9620/27/04/2012
துறை: அனைத்து துறைகள்,காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.
கிராமம்: ,மெய்க்கிழார்பட்டி

அனுப்புநர்: வெ.கருப்பச்சாமி, த,‌பெ.‌‌‌‌‌ெ‌வள்ளையன்
மெய்க்கிழார்பட்டி கிராமம்,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா வணக்கம்
நான் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கியில் Busines corresepondent பணிபுரிந்து வருகிறேன். தற்பொழுது மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முலமாக வழங்கப்படு்ம OAP. WP ‌போன்ற அனனத்து உதவிதொகை பெ றுபவர்களுக்கும் மற்றும் 100நாள் வேலை செய்பவர்களுக்கும் வங்கி கணக்கு துவக்க பணித்துள்ளார்கள் ஆனால் மேக்கிழார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 100நாள் வேலையில் முறைகேடு செய்வதற்கு ஏதுவாக தனது தம்பியை பணியில் அமர்த்தலாம் என்று என்னிக்கொண்டு வங்கி கணக்கு துவக்கவரு்ம மேற்கண்டநபர்களிடம் இவனிடம் வங்கி கணக்கு துவங்கினால் உங்களது உதவி தொகைகளும் 100நாள் வேலையும் நின்றுபோகும் என்று பீதியை கிளப்புவ‌தோடு அல்லாமல் என்னை வங்கி கணக்கு துவக்கவிடாமல் தடுத்தும் சாதி பெயரை சொல்லி திட்டியும்
என்னை அடிக்கடி மிரட்டிவருகிறார்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "ஊராட்சி தலைவர் என்னைமிரட்டுவது சம்மந்தமாக"

#1 Comment By spmdu On May 16, 2012 @ 10:53 am

G3/9620/12 dt. 16.05.12 இம்மனு சம்பந்தாக விசாரணை செய்ததில், மனுதாரர் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கியில் Busines corresepondent பணிபுரிந்து வருவதாகவும், மெய்க்கிழார்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட மக்களுக்கு முதியோர் உதவி தொகை மற்றும் பென்சன் பெற்றுத்தருவதாகவும். மனுதாரரை எதிர்மனுதாரர் இவ்வேலையை விட்டு விலகிக் கொள் என்றும், ஊராட்சியில் வேறு வேலை வாங்கித்தருவதாக கூறியதை மனுதாரர் ஏற்றுக் கொள்ளவில்லை.
ல்நடவட காவல் கண்காணிப்பாளர். மதுரை மாவட்டம்.

#2 Comment By spmdu On May 21, 2012 @ 2:33 pm

G3/9620/12 dt. 21.05.12 இம்மனு சம்பந்தாக விசாரணை செய்ததில், மனுதாரர் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கியில் Busines corresepondent பணிபுரிந்து வருவதாகவும், மெய்க்கிழார்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட மக்களுக்கு முதியோர் உதவி தொகை மற்றும் பென்சன் பெற்றுத்தருவதாகவும். மனுதாரரை எதிர்மனுதாரர் இவ்வேலையை விட்டு விலகிக் கொள் என்றும், ஊராட்சியில் வேறு வேலை வாங்கித்தருவதாக கூறியதை மனுதாரர் ஏற்றுக் கொள்ளவில்லை.மனுதாரரை சாதியை சொ ல்லி திட்டினாரா என்ற புகார் குறித்து உசிலம்பட்டி வட்ட காவல் ஆய்வளாரின் விசாரணையில் உள்ளது. விசாரணை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9620/%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.