மனு எண்:

அனுப்புநர்: கிராம ‌‌பொது மக்கள் மற்றும் லி்ங்கம்,
இளைஞர் நற்பணிமன்றம்,
46, நடுத்தெரு,
விரகனூர் கிராமம்,
விரகனூர்,
மதகு அ‌‌‌‌‌ணை,
மது‌‌‌‌‌‌ரை-9.

பெறுநர்: உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை-625020.

ஐயா,
மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுகா, விரகனூர் கிராமத்திற்கு உட்பட்ட விரகனூர் மதகு அணை எதிரில் விரகனூரைச் சேர்ந்த சண்முகராஜா மகன் கணேசன் என்பவர் அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 20 (இருபது) கட‌ைகளுக்கு மேல் கட்டி சுமார் பத்து வருடங்களாக வாடகை வாங்கி அனுபவித்து வருகிறார். இவர் பக்கத்தில் லெஷ்சுமி பிரிக்ஸ் என்ற பெயரில் சேம்பர் நடத்தி வருகிறார். பக்கத்து அரசு புறம்போக்கு இடத்தையும் சேர்த்து கடைகளை கட்டி அனுபவித்து வருகிறார். பொதுமக்கள் யாரும் தட்டிகேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். மாண்புமிகு ஐயா அவர்கள் மேற்படி அரசு இடத்தை கைப்பற்றி இத்தனை வருடங்களாக அரசு இடத்தில் கடைகட்டி வாடகை வாங்கிய பணத்தையும் வசூல் ‌செய்து இடத்தையும் கைப்பற்றி, கணேசன் மீது சட்டப்படி தாங்கள் நடவடிக்கை எடுக்குமாறும் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

இப்படிக்கு,
விரகனூர் கிராம பொதுமக்கள்

குறிப்பு:
தாங்கள் ‌‌‌‌‌‌‌நேரடியாக தலையிட்டு நடவடிக்‌‌‌‌கை எடுக்க ‌‌‌வேண்டும் கீழ் அதிகாரிக‌ள‌ை‌ சரிகட்டிவிடுவார் ‌‌‌ம‌ே‌ற்படி கணேசன் என்பவர்.

2 Responses to “புறம்போக்கு இடத்தில் கடைகள் வைத்திருப்பது – தொடர்பாக”

  1. denhurbmdu says:

    மனுதாரால் குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான சாலை பகுதியானது தேசிய நெடுஞ்சாலை 49ஐ (மதுரை தனுஷ்கோடி சாலை) சார்நத பகுதியாகும். இப்பொருள் தொடர்பாக கோட்டப் பொறியாளர் தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சிவகங்கை அவர்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  2. tahmsmdu says:

    மனுதாரர் குறிப்பிட்டுள்ள ச.எண்.35,36 கிராமக் கணக்கில் சாலை என உள்ளதால் மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.