மனு எண்:

அனுப்புநர் :
திருமதி.எம்.ராஜலெட்சுமி,
க-பெ.திரு.(லேட்).முத்திருளாண்டி,
3-77- மேலத்தெரு,
பனையுர், மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா, எனது கணவா் முத்திருளாண்டி என்பவா் கடந்த 22.02.2006-ம் தேதி மதுரை மாநகராட்சி வாகன சோதனை சாவடி ரிங் ரோட்டில் காவலராக பணிபுரிந்த போது அடையாளம் தெரியாத இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த மினி டோர் லாரி நிற்காமல் எனது கணவர் மீது மோதியதில் அவா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 26.2.06 அன்று இறந்துவிட்டார. அந்த வாகனத்தின் பதிவு எண் மற்றும் விபரங்களை விசாரணை செய்து கஷ்ட ஜீவம் செய்து வரும் எனக்கு உதவிடுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ராஜலெட்சுமி.

One Response to “வாகன விபத்து – வாகனத்தின் பதிவு எண். கேட்டல் – தொடா்பாக”

  1. spmdu says:

    ஜி3-9557-12 நாள். 15.05.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில், மனுதாரரின் கணவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து விட்டபடியால் அவனியாபுரம் காவல் நிலைய குற்ற எண். 112/12 u/s 304(A) IPC யாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனத்தை கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்படி வாகனத்தை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் UN (Undeteted) கொடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர் முதலமைச்சரின் நிவாரணம் நிதி பெறாமல் இருந்தால் நிவாரண நிதி கிடைக்க சிபாரிசு செய்யப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.