- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

டாரக்டர் கழப்பை செய்ய கொடுத்த பணம் திருப்ப பெறுவது சம்மந்தமாக‌

மனு எண்: தொடுவானம்/9540/23/04/2012
துறை: அனைத்து துறைகள்,காவல்துறை கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.
கிராமம்: ,ராஜக்காள்பட்டி-அலங்காநல்லூர்

அனுப்புநர்: வெ. முருகன் த/பெ வெள்ளைச்சாமி
மறவர்பட்டி இராஜாக்கள்பட்டி ஊராட்சி
அலங்கா நல்லுர்

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா.
நான் 21.12.2011 அன்று மதுரை மாவட்டம் வாடிபட்டி வட்டம் ஆண்டிபட்டி பங்களா அருகில் ஸ்ரீகிருஸ்னா வெல்டிங் வைத்து நடத்தி வரும் குடி என்ற ராஜசேகரன் என்பவரிடம் டாரக்டர் கழப்பை மற்றும் டிப்பர் செய்ய ரு.71500ஆயிரம் ருபாய் கொடுத்தேன். அவர் செய்துகொடுக்காமல் ஏமாற்ரினார் மேலும் இது சம்மந்தமகாக sp அலுவலகத்தில் புகார் செய்தேன் அவர்கள் வாடிபட்டி காவல் நிலையத்தில் விசாரனை செய்தாற்கள் அனால் என்னை தினமும் அலையவிட்டு இதுவரை எனக்கு பொருலோ பணமோ இதுவரை வழங்க படவில்லை எனவே மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை வாங்கி கொடுக்குமாறு பனிவுடன் அய்யா அவர்களை கேட்டுக்கொளுகிறேன்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "டாரக்டர் கழப்பை செய்ய கொடுத்த பணம் திருப்ப பெறுவது சம்மந்தமாக‌"

#1 Comment By spmdu On May 7, 2012 @ 1:28 pm

ஜி3-9540-12 நாள். 07.05.12 இம்மனு சம்பந்தமாக இருதரப்பினரையும் விசாரணை செய்ததில், கடந்த 14.03.12 அன்று மனுதாரருக்கு எதிர்மனுதாரர் பணம் கொடுத்துவிடுவதாக எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் கால அவகாசம் கேட்டுள்ளதால் மனுதாரரின் பணத்தை எதிர்மனுதாரிடமிருந்து விரைவில் பெற்றுத்தரப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9540/%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%95%e0%af%8a/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.