மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
வெள்ளலூர் கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், வெள்ளலூர் கிராமம் எண்.81. உட்கடை மட்டங்கிபட்டி கிராமமக்கள் சார்பாக எழுதிக்கொண்ட விண்ணப்பமனு

மேற்படி கிராமத்தில் 12வது பெரியார் பாசன பிரதான கால்வாய் 35வது மடை பாசனம் கட்டழகன் குளத்துக்கு செல்லும் மடைவாய்க்கலில் 15 அடி அகலம் சுமார் 350 அடி நீலம் அள்வுக்கு ஓம் ஸ்ரீ கிரானைட்ஸ் நிறுவனம், சென்னை ம்ற்றும் ஜி.ஜி.கிரானைட்ஸ் நிறுவனம் மதுரை இவர்களால் விதிகளுக்கு மாறாக கட்டழகன்குளம் ஆயக்கட்டு மடைவாய்க்கால் அழிக்கப்பட்டு சுமார் 150 அடி ஆழத்துக்கு மேல் அரசுக்கு சொந்தமான இடத்தில் கிரானைட் கற்கள் வெட்டப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்ணாம்பாறை ஊரணி என்ற புறம்போக்கு ஊரணியையும் ஆக்கிரமித்து ஆடுமாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு வழியில்லமல் தடுக்கப்பட்டுள்ளது.

சுற்றிலும் உள்ள நிலச் சொந்தக்காரர்களுக்கு செண்டு 25 ஆயிரத்துக்கு மேல் விலை கொடுப்பதால் ஊரணியை சுற்றி உள்ளவர்கள் நிலத்தை விற்று வருகின்றனர்.

எனவே ஊரனி ஆடுமாடுகள் தண்ணீர் குடிக்க வழி இல்லாமல் வழியின்றி தீவு போல் ஆகும் நிலை உள்ளது.

கட்டழகன் குளக்கண்மாயில் பல ஏக்கர் அளவில் 25 அடி உயரத்தில் கற்குவியல்களை அடுக்கி நீர்பிடிப்பு பகுதியையும் தூர்த்து வருகின்றனர்.

ஓம் ஸ்ரீ கிரானைட்ஸ் உரிமையாளர்கள்:-

1. திருமதி. சைலஜா ரெட்டி, க/பெ.திரு.சுப்பாரெட்டியார்(பல்லவா கிரனைட்ஸ் உரிமையாளர்)
2. டாக்டர்.செல்வகுமார், முன்னால் எம்.எல்.ஏ.
3. டாக்டர்.சாந்தமோகன், சென்னை.
4. திரு.செந்தாமரைக்கண்ணன்.

ஜி.ஜி.கிரானைட்ஸ் உரிமையாளர்:-

1. திரு.ஜி.கோபால், மதுரை.

மேற்கண்ட ஆக்கிரமிப்புகள் பற்றி பலமுறை கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் போன்ற்வர்களுக்கு தெரியப்படுத்தியும் பார்த்துவிட்டு சென்றனரே தவிர தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அரசு விதிகளுக்கு மாறாகவும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு முரணாகவும், தங்கள் பணபலத்தால் அரசு புறம்போக்கு நிலம் கொள்ளை அடிக்கப்பட்டு பல கோடிக்கு அரசுக்கு இழப்பும் அப்பாவி கிராம மக்களை ஏமற்றி கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்திடவும் மிக்கப் பணிவோடு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றியுடனும், எதிர்ப்பார்ப்புடனும்.

மட்டங்கிப்பட்டி கிராம பொதுமக்கள்.

1. ந.இராமகிருஷ்ணன், த(பெ)நல்லப்பன்.
2. மா.கிருஷ்ணன், த(பெ)சுப.மாயன்.
3. ஆண்டிச்சி, க(பெ)நா.மந்தயன்.
-மட்டங்கிப்பட்டி

One Response to “மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், வெள்ளலூர் கிராமம் எண்.81. உட்கடை மட்டங்கிபட்டி கிராமமக்கள ் கிராமமக்கள் சார்பாக எழுதிக்கொண்ட விண்ணப்பமன”

  1. ddminmdu says:

    ந.க.எண். 351-2012-கனிமம். மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மேற்படி கிராணைட் நிறுவனத்தனரிடம் மடைவாய்கால் கரைகளை பலப்படுத்தும்படியும், நீர்வரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி குவாரிபணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுண்ணாம்புபாறை ஊரணிக்கு செல்லும் வழி எதுவும் தடுக்கப்படவில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
    துணை இயக்குநர்(கனிமவளம்),மதுரை.