மனு எண்:

‌ரேசன் கார்டு பதிவு செய்வது சம்மந்தமாக

அனுப்புநர்: செ.பாண்டி,
த/பெ செல்லாண்டி.
சின்னக்கட்டளை.
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.எனக்கு வயது 25 ஆகின்றது.எனக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய அப்பாவின் கார்டில் எனது பெயரையும். என்னுடைய மாமனாரின் கார்டில் எனது மனைவின் பெயரையும், நீக்கம் செய்துள்ளேன்.
நான் புதிய ரேசன் கார்டு வாழங்குவதற்கு வட்ட வழங்கல் ‌அதிகாரி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுஎண் 1164/11 நாள் – 02.10.2011
ஆறு மாதத்திற்கு மேலாகியுள்ளதால் எனக்கு தாங்கள் புதிய புதிய ரேசன் கார்டு வாழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
செ.பாண்டி,
த/பெ செல்லாண்டி.
சின்னக்கட்டளை.

One Response to “‌ரேசன் கார்டு பதிவு செய்வது சம்மந்தமாக”

  1. dsupomdu says:

    மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள 1-66 என்ற முகவரியில் குடியிருப்பு இல்லை என்பதால் மேற்படி புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

    வட்ட வழங்கல் அலுவலர்
    பேரையூர் வட்டம்.