மனு எண்:

பட்டா மாறுதல் சம்பந்தமாக மனு.

அனுப்புநர் :
திரு.பிச்சை மைதீன்,
த-பெ. தாவுத் சுலைமான்,
சக்கிமங்கலம் 2வது பிட்,
வடக்கு வட்டம்,
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
மதுரை வடக்கு வட்டம், சக்கிமங்கலம் உள்வட்டம், பிச்சை மைதீன் என்ற நான் கடந்த 10 ஆண்டுகளாக மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். சக்கிமங்கலம் புல எண்.170-6-ல் கட்டப்பட்ட 1சென்ட் இலவச வீட்டுமனை பட்டாவிற்கு எனது பெயா் மாற்றித்தரும்படியும், மேலும் இந்த இடத்திற்கான வீட்டுவரி ரசீது எனது பெயரில் உள்ளது. எனவே எனது பெயருக்கு பட்டா மாற்றித் தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
பிச்சைமைதீன்.

One Response to “பட்டா மாறுதல் சம்பந்தமாக மனு.”

  1. tahmnmdu says:

    தீர்த்தக்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் அல்லாத அனைத்து இனத்தவர்களுக்கும் சக்கிமங்கலம் கிராமத்தில் மாற்றுஇடம் தேர்வு செய்து பட்டா வழங்கத் தயார் நிலையில் உள்ளது. தற்போது உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்பாணை வரும் பட்டச்த்தில் பட்டா வழங்கப்படும்.மனுதாரர் தான் குடியிருந்து வருவதாக தெரிவித்து வீட்டு மனை பட்டா கோரியுள்ள புலம் தொடர்பாகவும் மேற்கண்ட தீர்ப்பாணை வரப்பெற்ற பின்னரே நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்ற விபரம் மனுதாருக்குத் தெரிவிக்கப்படுகிறது.