- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

குலமங்கலம் முதல்பன்னைகுடி வரை உள்ளகிராமச்சாலை சீரமைத்தல்

மனு எண்: தொடுவானம்/9499/18/04/2012
துறை: BDO அலங்காநல்லூர்
கிராமம்: ,குலமங்கலம்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
குலமங்கலம் கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

குலமங்கலம் முதல் பன்னைகுடி வரை உள்ள கிராமச்சாலை மிக மோசமான நி‌‌ை‌‌லயில் உள்ளதால் அதில் பயனிக்கும் குலமங்கலம் மற்றும் காயாம்பட்டி கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதால்இச்சாலையினை சீரமைத்துத் தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்,


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "குலமங்கலம் முதல்பன்னைகுடி வரை உள்ளகிராமச்சாலை சீரமைத்தல்"

#1 Comment By demjrurmdu On April 25, 2012 @ 1:08 pm

மனு குறிப்பிடப்படும் சாலையானது மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய பராமரிப்பில் உள்ளது. எனவே, இது சம்பந்தமாக ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் மதுரை மேற்கு அவர்களிடம் அறிக்கை பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#2 Comment By bdomdwmdu On May 2, 2012 @ 12:18 pm

குலமங்கலம் முதல் பண்ணைகுடி வரை உள்ள தார்ச்சாலையானது அலங்காநல்லுர்ர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டதாகும். எனவே மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் இப்பணிகள் செய்ய இயலாது என குலமங்கலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ந.க.எண்.4/2011/தி1 நாள் 2.5.2012

#3 Comment By bdoalamdu On May 4, 2012 @ 4:40 pm

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சாலை பண்ணைகுடி ஊராட்சியில் தாய் திட்டம் செயல்படுத்தப்படும் போது சீரமைக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9499/%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%81/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.