அனுப்புநர் :
திருமதி.ஆா்.விசாலாட்சி,
க-பெ.ஆா்.ஜெய்சங்கா்(லேட்)
41,மேலப்பொன்னகரம் 5வது தெரு,
மதுரை-16
பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா,
நானும் எனது கணவா் திரு.ஆா்.ஜெய்சங்கா் ஆகிய இருவரும் கலப்பு 1991-ல் கலப்பு திருமணம் செய்துகொண்டோம். நான் பிராமண வகுப்பைச் சோந்தவள். எனது கணவா் இந்து கள்ளா் வகுப்பைச் சோ்ந்தவா். எனது கணவா் 18.08.2008 அன்று இறந்து விட்டார். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். நான் ஒரு பட்டப்படிப்பு முடித்துள்ளேன். ஆகவே. எனக்கு அய்யா அவா்கள் தயைகூா்ந்து அரசு உதவி பெற ஆதரவற்ற விதவைச்சான்று வழங்க ஆவண செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
ஆா்.விசாலாட்சி.
மனுதாரின் மனு மதுரை மேற்கு மண்டல துணை வட்டாட்சியருக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் உரிய ஆவணங்களுடன் மதுரை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மதுரை மேற்கு மண்டல துணை வட்டாட்சியரின் நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். தகுதியிருக்கும் பட்சத்தில் மட்டுமே உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. மனுதாரருக்கு ஆதரவற்ற விதவைச் சான்று வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஓ.மு.2722-12-ஜே நாள் 27.4.12
உங்கள் மனு நடவடிக்கையில் உள்ளது. வட்டாட்சியரின் அறிக்கை வரப்பெற்றவுடன் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
வருவாய் கோட்டாட்சியர், மதுரை.