மனு எண்:

பட்டா வேண்டுதல்

அனுப்புநர்: ஆர்.மீனாட்சி
க-பெ. ராமசாமி
அச்சம்பட்டி

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அச்சம்பட்டி கிராமத்தில் சர்வே எண்.28/3A இல் 12 செண்ட் காலிமனையிடம் உள்ளது. கிரய பத்திரம் தீயில் எரிந்து விட்டது. இந்த இடத்திற்கு முறையாக இரசீது செலுத்தி வருகின்றேன். இந்த இடத்திற்கு பட்டா வேண்டி இரண்டு முறை விண்ணப்பித்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே. எனக்கு பட்டா மாறுதல் செய்து தர வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்.

One Response to “பட்டா வேண்டுதல்”

  1. tahvptmdu says:

    மனுதாரர் தனது கோரிக்கைக்கு ஆதாரமாக சரியான ஆவணம் எதையும் கொடுக்கவில்லை. எனவே இவரது கோரிக்கையின் மெய்த்தன்மை குறித்து அறிய இயலவில்லை. உரிய ஆதார ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே விசாரணை செய்து பட்டா மாறுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. மனு தள்ளுபடி.