- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

அரசு பஸ் செல்லும் வழிதடம் மாற்றி செல்ல நடவடிக்கை எடுக்க கேட்டல்

மனு எண்: தொடுவானம்/9485/17/04/2012
துறை: அனைத்து துறைகள்,மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.
கிராமம்: ,கருமாத்தூர்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
கருமாத்தூர் கிராமம்,
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.டித

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை.

ஜயா.
நான் முடக்குசாலையில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வருகிறேன். அண்ணா பஸ் நிலையம் செல்வ்தற்கு குறைவான எண்ணிக்கை பஸ்களே உள்ளது. எனவே
1. அரசு பஸ்கள் மாட்டுத்தாவணிக்கு செல்வதற்கு ஆரப்பாளையம் சுற்றி வருகிறது. அந்த பஸ்களை அரசரடி. புது ஜெயில் ரோடு வழியாக அண்ணா பஸ் நிலையம் சென்று மாட்டுத்தாவணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கலாம். 2. அடுத்ததாக சில பஸ்கள் பெரியார் நிலையம் சென்று மாட்டுத்தாவணிக்கு வருகிறது. பெரியார் நிலையம் செல்வதற்கு நிறைய பஸ்கள் இருக்கின்றன. எனவே மாட்டுத்தாவணிக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்று அண்ணா பஸ் நிலையம் சென்று மாட்டுத்தாவணிக்கு செல்லலாம். 3. பெரியார் நிலையத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையம் செல்வதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ்கள் உள்ளதால் 700 எண்ணுள்ள பஸ்களை அண்ணா பஸ் நிலையம் சென்று மாட்டுத்தாவணிக்கு செல்வதற்கு ஆவண செய்யலாம் என எண்ணுடைய ஆலோசனைகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்

This post was submitted by tahsssmlrmdu.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "அரசு பஸ் செல்லும் வழிதடம் மாற்றி செல்ல நடவடிக்கை எடுக்க கேட்டல்"

#1 Comment By tnstccomml On April 25, 2012 @ 2:52 pm

மேற்படி வழித்தடத்தில் நாளொன்றுக்கு 90 தனிநடைகள் இயக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தங்களது ஆலோசனைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9485/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%ae/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.