மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சொக்கம்பட்டி கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எங்கள் ஊரில் முறையாக குடிநீர் வசதியும், தெருவிளக்கு வசதியும் முறையாக இல்லை, தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் மர்ம நபர்கள் சிலர் சட்டத்திற்கு புறம்பான சில வேலைகளை செய்து வருகின்றனர். ( மது பானம் விற்பனை ) இதை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும், கடந்த 10 நாட்களாக எங்களுக்கு இந்த இரண்டு வசதிகளையும் செய்து தராமல் ஊராட்சி மன்ற நிர்வாகம் இது வரை செய்து தரவில்லை மேலும் எங்கள் ஊரில் இருக்கும் சிமெண்ட் சாலைகளிலும் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு வி‌ளைவிக்கிறது. இதையும் பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முயறயிட்டுள்ளோம். இதை ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் இது வரை இதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஊர் வம்பு நமக்கு ஏன் என்ற முறையில் ஊராட்சி மன்றத்தலைவர் அவர்கள் செயல்படுகிறார், எனவே தாங்கள் கவனத்திற்கு இந்த புகாரை கொண்டு வந்துள்ளோம். எனவே தாங்கள் இந்த புகாரின் மீது தனி கவனம் செலுத்தி சரி சரிசெய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

One Response to “”

  1. bdokotmdu says:

    குடிநீர் வசதி நல்ல முறையில் உள்ளது. தெருவிளக்குகள் நல்ல முறையில் இயங்குகின்றன. கழிவு நீா் கால்வாய் வசதி நடப்பு நிதியாண்டில் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.