மனு எண்:

அனுப்புநர் :
கருப்பணமூப்பன் (எ) காசிகருப்பையா
கீழமட்டையன் கிராமம்
கச்சிராயிருப்பு அஞ்சல்
மேலக்கால் வழி
வாடிப்பட்டி வட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எனக்கு சொந்தமான புஞ்சை நிலமான சா்வே எண்.707-4சி-ல் உள்ள 1 ஏக்கா் 25 செண்டு புஞ்சை நிலத்தை லேட் அய்யாச்சாமி மனைவி அங்கம்மாள் மற்றும் அவரது மகன் மாயாண்டி இருவரும் சோ்ந்து தாங்கள்தான் நிலத்திற்குச் சொந்தக்காரா் எனக் கூறி மேற்படி நிலத்தை திரு. கணேசன் என்பவருக்கு முறைகேடாக விற்றுவிட்டனா். இது தொடா்பான வாடிப்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது அந்த இடத்தில் சட்டத்திற்கு விரோதமான முறையில் மேற்படி விவசாய நிலத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் தனது சொத்தை இழக்கும் வகையிலும் மேற்படி நிலத்தில் மண் அள்ளுவதற்கு சட்டவிரோதமாக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. எனவே மேற்படி இடத்தில் மணல் மற்றும் உடைகல் ஜல்லி எடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
கருப்பணமூப்பன் (எ) காசிகருப்பையா

2 Responses to “ஆள்மாறட்டாம் செய்து நிலத்தை விற்பனை செய்து அகபரித்துள்ளது – தொடா்பாக.”

  1. ddminmdu says:

    ந.க.எண். 351-2012-கனிமம். மனுதாரர் தெரிவித்துள்ள புலமான 707-4சின் தெற்குப்பக்கத்தில் புலஎண். 707-4ஈ மற்றும் 5 ஆகிய புலங்களில் உடைகல் வெட்டி எடுத்துக்கொள்ள கழுவத்தேவன் மகன் தர்மேந்திரன் என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர் புகார் மனுவில் தெரிவித்துள்ள புலஎண். 707-4சி, 0.50.0 ஏர்ஸ் இடத்தில் எந்தவித குவாரிப் பணியும் நடைபெறவில்லை. மனுதாரரும் தனக்கு பாத்தியப்பட்ட இடம் தொடர்பான தாவாநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது எனவும் யாரும் எடுத்துவிடுவோர்களோ என்ற எண்ணத்தில் மனு கொடுத்ததாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

  2. ddminmdu says:

    ந.க.எண். 351-2012-கனிமம். மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மேற்படி கிராணைட் நிறுவனத்தனரிடம் மடைவாய்கால் கரைகளை பலப்படுத்தும்படியும், நீர்வரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி குவாரிபணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுண்ணாம்புபாறை ஊரணிக்கு செல்லும் வழி எதுவும் தடுக்கப்படவில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
    துணை இயக்குநர்(கனிமவளம்),மதுரை.