மனு எண்:

நில அபகாிப்பு சம்பந்தமாக

அனுப்புநர் :
மித்ரா,எஸ்.
க/பெ.வே.வல்லையப்பன்,
க.எண்.18 1வது மாடி,
1வது தெரு, ராம்நகர்,
பைப்பாஸ்ரோடு,
மதுரை 625 010
செல்போன் எண்.9842166533

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான், மதுரை பல்கலைநகரில் 3வது வடக்குத்தெருவில் இருக்கும் கதவு எண்.2/216, 2/217, 2/218, 2/219 மற்றும் 2/220 உள்ள வீடுகள் எனது சகோதரி கோகிலவாணி என்பவருக்குச் சொந்தமானது. எனது சகோதரி 22.06.2010ம் தேதி இறந்து விட்டார். மேற்படி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் திரு.சுதாகர் என்பவர் மேற்படி வீடுகளை அபகரிப்பு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதுடன், என் மீதும், எனது குடும்பத்தினரின் மீதும் கொலை மிரட்டல் விடுகின்றார். மேற்படி சொத்துக்கு எந்தவொரு சொந்தமில்லாத தனிநபர் அதனை அபகரிக்க முயற்சிப்பதனை தடுத்து நிறுத்திட வேண்டுவதுடன் எங்களது உயிர்களுக்கு பாதுகாப்பு வசதியும் செய்து தர வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எஸ். மித்ரா,

One Response to “நில அபகாிப்பு சம்பந்தமாக”

  1. compolmdu says:

    ஆர்5/189/16923/12, நாள் 18.04.12. இம்மனு மீதான விசாரணையில் மனுதாரரின் புகாரில் எதிர்மனுதாரர் தன் நிலத்தை அபகரித்ததாக புகார் குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் விசாரித்ததில் எதிர்மனுதாரர் சட்டப்படி நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்வதாக எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டது. இதனை மனுதாரரும் ஏற்றுக்கொண்டார். எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
    காவல் ஆணையர், மதுரை மாநகர்.