மனு எண்:

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சமயநல்லூர் கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதிப்பிற்குரிய ஐய்யா
வணக்கம். சமயநல்லூர் ஆரம்பசுகாதார நிலையம். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியை சுற்றியுள்ள பல கிராம மக்களூக்கு மிகவும் பயனுள்ளதாக குறிப்பாக கற்பினி தாய்மார்களுக்கு, முதியவர்களுக்கும் மிகவும் பயணுள்ளதாக உள்ளது. அபபடிபட்ட இடத்திற்கு தார்சாலை குண்டும் குழியுமா உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக கற்பிணி பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
அகவே தார்சாலை போடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

4 Responses to “தார்சாலை வேண்டி (பவர்கவுஷ்-சத்தியமூர்த்திநகர்)”

 1. bdomdwmdu says:

  பரவை பேரூராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இப்பகுதியில் தார்ச்சாலை அமைத்தல் தொடர்பாக நிதிஆதாரம் கிடைக்கப்பெறும் சமயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

  .ந.கஎண்.4/2011.அ1 நாள் 29.5.2012

 2. adtpmdu says:

  பரவை சத்தியமூர்த்திநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும்பாதை மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானது என்பதனால் இக்கோரிக்கை பரவை பேரூராட்சியினால் ஏற்க இயலாது என்ற விபரம் பரவை பேரூராட்சி செயல் அலவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 3. adtpmdu says:

  பரவை சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதை மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமானது எனவும், மேற்படி சாலையை பரவை பேரூராட்சிக்கு ஊராட்சி ஆணையாளர் ஒப்படைத்தர்ல் மேற்படி பணிகள் பரவை பேரூராட்சி மூலம் மேற்கொள்ள இயலும் என பரவை பேரூராட்சி செயல் அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள விபரம் பணிவுடன் தெரிவிக்கப்படுகிறது

 4. bdomdwmdu says:

  பரவை பேரரூராட்சிக்கு உட்பட்ட சத்தியமுர்த்திநகரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது ஆகையினால் தார்சாலை அமைத்தல் தொடர்பாக பரவை பேரூராட்சி அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்யும்மாறு சமயநல்லுார் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
  ந. க. எண். 4 / 2011 – அ “1 ” நாள் 24 – 4 – 2012.