மனு எண்:

அனுப்புநர் :
எம், பழனிக்குமார்,
புலிப்பட்டி (போஸ்ட்)
மேலுர் தாலுகா,
மதுரை மாவட்டம்,

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டம், புலிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த எனது தாத்தா ஊமையன் அவர்கள் 20,3,2012 அன்று காலமாகிவிட்டார்,அதற்கு அரசு அளிக்கும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.2500/- பணத்தை பெற விண்ணப்பம் செய்தோம்.
அப்போது பிரசிடெண்ட், துணை பிரசிடெண்ட் இருவரும் ரூ.1000/- இலஞ்சம் தந்தால்தான் செக்கில் கையெழுத்து போடுவோம் என மறுத்து விட்டனர். இதுபோல் நிறைய அரசு திட்டங்களில் ஊழல் செய்கிறார்கள்,
ஆதலால் கலெக்டர் அவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்,

இப்படிக்கு,
எம், பழனிக்குமார்,

One Response to “ஈமக்கிரியை மான்யத் உதவித் தொகை வழங்கக் கேட்டல் – தொடர்பாக,”

 1. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  மேலுார் ஊராட்சி ஒன்றியம், புலிப்பட்டி ஊராட்சி, புலிப்பட்டி கிராமத்தில் வசித்த க.ஊமையன் என்பவர் இறந்ததற்கு புலிப்பட்டி ஊராட்சி கணக்கு எண்:4755-ல் காசோலை எண்:557298 நாள்:10.04.2012-ல் ஊமையன் மகன் கட்டையன் என்பவரிடம் வழங்கப்பட்டுவிட்டது. மேலும் விண்ணப்பதாரர் கூறியவாறு சம்பவம் ஏதும் நடக்கவில்லை என மனுதாரருக்குத் தெரிவி்க்கப்படுகிறது.
  ————–
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்.