மனு எண்:

பேருந்து வழிதட நீட்டிப்பு தொடர்பாக‌

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சாப்டூர் கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா,
எங்களது கிராமத்தில் இருந்து சுமார் இரு நூறு குழந்தைகள் அத்திபட்டி மற்றும் கோட்டைபட்டியில் அமைந்து இருக்கும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட அந்த வழிதடத்தில் எங்களது ஊருக்கு உசிலமபட்டியிலிந்து வந்து செல்லும் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கபட்டு வருகிறது. அந்த பேருந்தும் காலை 6:45 க்கு பின் காலை 9:30 மணிக்கு மட்டுமே வந்து செல்கிறது. இதனால் பள்ளி செல்லும் பெரும்பாலான குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் தான் செல்ல வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
திருமஙலத்திலிருந்து அத்திபட்டிக்கு காலை சுமார் 8 மணி வாக்கில் ஒரு பேருந்து வந்து செல்கிறது. அந்த பேருந்து சேவையை சாப்டூர் வரை நீட்டித்தால் எங்கள் ஊர் பள்ளி குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். தயைகூர்ந்து இந்த விண்ணப்பதின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். நன்றி.

One Response to “பேருந்து வழிதட நீட்டிப்பு தொடர்பாக‌”

  1. tnstccomml says:

    மேற்படி திருமங்கலம் – அத்தி்ப்பட்டி வழித்தடப் பேருந்தினை சாப்டூர் வரை நீட்டிப்பு செய்தால் அத்திப்பட்டி மற்றும் சாப்டூர் கிராம மக்களிடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேற்படி கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து புதிய பேருந்து சேர்க்கையின் போது செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.