- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

ஆதரவற்ற முதியேரர் MGNREGS பணிவேண்டி

மனு எண்: தொடுவானம்/9359/07/04/2012
துறை: BDO அலங்காநல்லூர்,அனைத்து துறைகள்
கிராமம்: ,சின்னை இலந்தைக்குளம்

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
சின்னை இலந்தைக்குளம் கிராமம்,
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா
மேற்கண்ட ‌ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிய ஏற்கனவே பணிபுரிந்த ஆதரவற்ற முதியேரர் உதவி ரூ1000 பெறும் பயனாளிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கிராமத்தில் பெரும் சச்சரவுகள் ஏற்படுகிறது. எனவே அய்யா அவர்கள் தக்க நடவடிக்கை மேற் கொள்ள ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "ஆதரவற்ற முதியேரர் MGNREGS பணிவேண்டி"

#1 Comment By bdoalamdu On April 9, 2012 @ 1:45 pm

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 2012 முதல் 2016ஆம் ஆண்டுகளுக்கான வேலை அடையாள அட்டை புதுப்பித்தல் பணியில் கடந்த ஆண்டுகளில் பணிக்குவந்த நபர்களுக்கு மட்டுமே வேலை அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமென ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் அவர்களின் கடித எண். 107091-2011-தே.ஊ.வே.உ.தி-2-1 நாள் 30.12.2011இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் கடந்த ஆண்டுகளில் சுமார் 250க்கு குறைவான நபர்களே பணிக்கு வந்துள்ளனர். அதனடிப்படையில் மேற்படி ஊராட்சிக்கு 250 வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பணிக்கு வந்திருப்பவர்கள் ஊராட்சிமன்ற தலைவரை அணுகி வேலை அடையாள அட்டை பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9359/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-mgnregs-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.