மனு எண்:

பேருந்து வசதி வேண்டி

அனுப்புநர்: ஜவகர் BABL மற்றும்
NMS நகர் பொதுமக்கள்
சிச்சிலுப்பை
ஆலாத்தூர் கிராமம்,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் ஆலாத்தூர் ஊராட்சி சிச்சிலுப்பை கிராமம்,NMS நகரில் குடியிருந்து வருகிறோம். ஊமச்சிகுளம் இருந்து கடச்சனேந்தல் வழி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து சென்று வருகிறது இடைபட்ட ‌நேரத்தில் பேருந்த வசதி இல்லை. ஆட்டோவில் அப்பகுதிக்கு செல்ல ரூ50- கொடுத்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் நடுத்தர பொதுமக்களும் தினக்கூலி ‌ஊழியர்களும் பெரும் பாதிப்பு அடைகின்றனர். இது தொடர்பாக
த.அ. போ.க மதுரை
மேலாளர் அவர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே பெரியார் பேருந்து நிலையம் முதல் ஊமச்சிகுளம் வரை சென்று வரும் பேருந்தை சிச்சிலுப்பை பகுதி வரை நீட்டித்து தர ஆவண செய்யுமாறு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஜவகர் BABL
NMS நகர்
சிச்சிலுப்பை

One Response to “பேருந்து வசதி வேண்டி”

  1. tnstccomml says:

    தற்போது சிச்சிலு‌ப்பை கிராமத்திற்கு பள்ளி மாணவ மாணவியர்களின் வசதிக்காக 8 தனிநடைகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் அடர்த்தி உயரும் பட்சத்தில் கூடுதல் ‌நடைகள் இயக்குவதற்கு ஆவண செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.