மனு எண்:

B,F. வேண்டி விண்ணப்பம்.

அனுப்புநர் :
ராஜலெட்சுமி,
க-பெ. முத்துஇருளன் (லேட்),
மேலத்தெரு,
பனையூர் கிராமம் மதுரை மாவட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது கணவர் எம்.முத்து இருளன் என்பவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்  (மதுரை கோட்டம்-ஐ) மதுரை 10 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில்  காவலராக (வாட்மேன்) வேலை பார்த்து  விபத்தில் இறந்துவிட்டார். நான் வயதான நிலையில் உதவி செய்வதற்கு யாரும் இல்லை. இரண்டு பெண்குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்து ஆறு வருடங்கள் ஆகிறது. இன்னும் அவரது அலுவலகத்தில் அவர் பார்த்த  வேலையில் பி.எப். பண்டில் மாத ஓய்வூதியம்  மற்றும் இதர பண பலன்களை வழங்க மறுக்கின்றனர் . அதை தயவு செய்து வழங்கி உதவிடும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
(எம்.ராஜலெட்சுமி)

One Response to “B,F. வேண்டி விண்ணப்பம்.”

  1. tnstccomml says:

    மனுதாரர் தன் கணவர் பணிபுரிந்ததற்கான ஆதாரம் மற்றும் இறந்ததற்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக கோரிக்கையின் மெய்த்தன்மை குறித்து அறிய இயலவில்லை. எனவே மேற்படி பணியாளர் பணிபுரிந்தது குறித்தும் அவர் விபத்தில் காலமானது குறித்தும் சான்று ஆவணங்களுடன் எங்களது தலைமை அலுவலகத்திலுள்ள வருங்கால வைப்பு நிதி துறைக்கு மனுச்செய்யும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

    பொது மேலாளர், த.நா.அ.போ.கழகம், மதுரை.