மனு எண்:

அனுப்புநர்: பாண்டியம்மாள்,
பா/க சந்தனம்
கம்பூர் கிராமம்,
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எனக்கு திருமணமாகி 10 வயதில் ஜெயஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது. எனக்கு H.I.V நோய் பாதிப்பு உள்ளதால், எனது கணவர் என்னைவிட்டு சென்றுவிட்டார். எனது தந்தையும் இறந்துவிட்டார். எனது வயது முதிர்ந்த தாய் மற்றும் எனது மகளுடன் வறுமை நிலையில் வாழ்ந்து வருகிறேன். எனவே அரசு வழங்கும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எனக்கு வீடு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோருதல்-சார்பாக.”

  1. bdokotmdu says:

    2012-13ம் ஆண்டு முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும் போது முன்னுரிமை வழங்கப்படும்.