- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

புதிய ரேசன் கார்டு ‌கேட்பு சம்மந்தமாக

மனு எண்: தொடுவானம்/9329/04/04/2012
துறை: அனைத்து துறைகள்,மாவட்ட வழங்கல் அலுவலர்
கிராமம்: ,சின்னக்கட்டளை

அனுப்புநர்: செ.பாண்டி,
த/பெ செல்லாண்டி.
சின்னக்கட்டளை கிராமம்,
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சின்னக்கட்டளையில் நான் வசிக்கிறேன்.எனக்கு வயது 25 ஆகின்றது.எனக்கு திருமாகி 3 வருடங்கள் ஆனது. நான் புதிய ரேசன் கார்டு வாங்குவதற்கு ‌ என்னுடைய அப்பாவின் கார்டில் எனது பெயரையும். என்னுடைய மாமனாரின் கார்டில் எனது மனைவின் பெயரையும், நீக்கம் செய்துள்ளேன்.
நான் புதிய ரேசன் கார்டு வாழங்குவதற்கு வட்ட வழங்கல் ‌அதிகாரி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மனுஎண் 1164/11 நாள் – 02.10.2011
ஆறு மாதத்திற்கு மேலாகியுள்ளதால் எனக்கு தாங்கள் புதிய புதிய ரேசன் கார்டு வாழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
செ.பாண்டி,
த/பெ செல்லாண்டி.
சின்னக்கட்டளை.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "புதிய ரேசன் கார்டு ‌கேட்பு சம்மந்தமாக"

#1 Comment By dsupomdu On April 12, 2012 @ 11:39 am

பேரையுர் வட்டம் சின்னக்கட்டளை கிராமம் திரு.முத்துப்பாண்டி த.பெ.வேலு என்பவருக்கு புதிய குடும்ப அட்டை வேண்டி மனு செய்தள்ளார். (மனு எண்: 1318ஃ11 நாள்: 19.09.11) மனுதாரரின் மனு விசாரணை செய்யப்பட்டு புதிய குடும்ப அட்டை அச்சடிக்க மாவட்ட விநியோக அலுவலர் அவர்களுக்கு முன்னுரிமைப்படி அடுத்த தொகுப்பில் அனுப்பப்பட உள்ளது. எல்காட் நிறுவனத்திலிருந்து புதிய குடும்ப அட்டை அச்சடித்து வரப்பெற்றவுடன் மனுதாரருக்கு வழங்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
வட்ட வழங்கல் அலுவலர்
பேரையுர்


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9329/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e2%80%8c%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.