மனு எண்:

கல்வி கடன் வழங்க கேட்டல் தொடா்பாக

அனுப்புநர் :
சி. ராஜாத்தி
க.பெ. சின்னன் (லேட்)
மாவிலிபட்டி, கிண்ணிமங்கலம் அஞ்சல்
திருமங்கலம் தாலுகா
மதுரை மாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எனது மகன் சி. விவேக் என்பவா் பி.எஸ்.சி நா்சிங் முதலாம் ஆண்டு சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் நா்சிங் கல்லுாாியில் படித்து வருகிறாா். நான் விவசாய கூலி வேலை செய்து வருவதாகவும், எனது கணவா் இறந்துவிட்ட நிலையிலும் என் மகனது படிப்பிற்காக ரூ.3,00,000 கட்ட வேண்டியுள்ளது. எனவே நான் வங்கிக் கடன் கேட்டு செக்காணுாரணி கனரா வங்கியில் தொடா்பு கொண்டேன். அவா்கள் கடன் தர மறுத்துவிட்டனா். எனவே எனது மகனின் படிப்பிற்காக கல்விக்கடன் வழங்க ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “கல்வி கடன் வழங்க கேட்டல் தொடா்பாக”

  1. dgmcanmdu says:

    மனுதாரது மகன் பன்னிரெண்டாவது வகுப்பில் 55.6 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். கல்விக்கடனுக்கு தகுதியான 60 சதவீத மதிபெண்களை விட குறைவான மதிப்பெண்களே மனுதாரது மகன் பெற்றுள்ளதால் அவரது கல்விக்கடன் கோரிய மனு விதிமுறைகளின்படி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.