மனு எண்:

அனுப்புநர்: தலைவர்
குறிச்சிபட்டி ஊராட்சி,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

குறிச்சிப்பட்டி
கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் கீழ்கண்ட உட்கடை
கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும்படி பணிவுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
கண்மாய்பட்டி
கண்மாய்ப்பட்டி கிராமத்திற்கு உள்ள ஓகைச்டி மோட்டார் நீரேற்றம்
பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதல் மின்மோட்டார் அமைத்து தருதல்.
வெள்ளிபூசை கோவில் முதல் ஆறுமுகம் வீடு வழியாக கலாவதி வீடு வரை
சிமெண்ட் சாலை அமைத்தல்.
‌முத்தம்பட்டி
மெயின்ரோடு முதல் கருப்பணன் வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல்
முத்தம்பட்டி தெற்கு வலவில் போர்வெல்லுடன் கூடிய மினி டேங்க்
அமைத்தல்.
முத்தம்பட்டி கிராமத்திற்கு அங்கன்வாடி மையம் இல்லாதிருப்பதால்
குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி அமைத்துத் தருதல்
குறிச்சிப்பட்டி
குறிச்சிப்பட்டி கிராமத்தில் தெற்கு வலவில் குடிநீர் பிரச்சனை
அதிகம் இருக்கின்றபடியால் போர்வெல்லுடன் கூடிய மினி டெங்க் அமைத்துக்
கொடுத்தல்
குறிச்சிப்பட்டி கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை அதிகம்
இருக்கின்றபடியால் போர்வெல்லுடன் கூடிய தண்ணீர் தொட்டி ஒன்று அமைத்துத் தர
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

குறிச்சிப்பட்டி கிராமத்தில் நாடகமேடை முதல் செல்வகுமார் வீடு வரை
சிமெண்ட் சாலை அமைத்தல்.
அம்மன்பட்டி
மேற்படி அம்மன்பட்டி கிராம்த்தில் குடிநீர் பிரச்சனை அதிகம்
இருக்கின்றபடியால் மினிடேங்க் ஒன்று போர்வெல்லுடன் அமைத்துதருதல்.
கோவில்பட்டி
பஞ்சமலை வீடு முதல் தனியாமங்கலம் வரை சிமெண்ட் சாலை அமைத்துதருதல்.
பள்ளிக்கூடம் அருகில் மழைநீர் வரத்து பாலம் அமைத்தல்
கூலிபட்டி
தெற்குவலவில் குடிநீர் பிரச்சனை அதிகம் இருக்கின்றபடியால்
மினிடேங்க் போர்வெல்லுடன் அமைத்து தருதல்
நாடகமேடை முதல் பாண்டி வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்தல்
ஆலம்பட்டி
நாரயணன் வீடு முதல் கம்பக்குடியான் வீடு வரை சிமெண்ட் சாலை
அமைத்தல்

One Response to “குறிச்சிப்பட்டி கிராமத்த்ற்கு அடிப்படை வசதிகள் வேண்டி”

 1. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  குறிச்சிப்பட்டி ஊராட்சியில் தற்போது 2012-2013‌-ம் ஆண்டிற்கான தாய்த்திட்டப் பணிகளுக்கான கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. அத்திட்ட தேவைப்பட்டியலில் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, தேவைப்பட்டியலில் இணைத்து தாய்த்திட்ட நிதியிலிருந்து செய்து கொள்ள மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  ———————-
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்.