மனு எண்:

அனுப்புநர் :
எல். சுந்தரராஜன்
மதுரை
(பொது மக்கள் சாா்பாக)

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாவட்டம், அண்ணா பேருந்து நிலையத்தில் திருவள்ளுவா் சிலை அருகில் வாகன நொிசல் அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் பள்ளி மற்றும் அலுவலகம் செல்பவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். மேலும் அஞ்சலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், எம்.ஏ.வி.எம்.எம். பள்ளி மற்றும் மருத்துவக்கல்லுாாி போன்ற முக்கிய இடங்கள் அமைந்திருப்பதால் மக்கள் அடா்த்தி அதிகமாக உள்ளது. இந்நிலையில் நான்கு திசைகளிலும் இருந்து வாகனங்கள் வந்தவண்ணம் இருப்பதாலும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவற்றைத் தவிா்க்கும் விதமாக அங்கு ஒரு டிராபிக் சிக்னல் அமைக்க ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

One Response to “டிராபிக் சிக்னல் வைக்க கோருதல் தொடா்பாக.”

  1. compolmdu says:

    ஆர்5/174/14876-A/12, நாள் 03.04.12. இம்மனு மீதான விசாரணையில் மனுதாரரின் கோரிக்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிக்னல் அமைக்க கேட்டல் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாலும், மேலும் சிக்னல் அமைப்பதற்கான உரிய வழிவகை செய்யப்பட்டு வருகிறது என்ற விபரம் மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

    காவல் ஆணையர், மதுரை மாநகர்.